டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் நியுசிலாந்து முதலிடம்!
இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளின் முடிவால் நியுசிலாந்து அணி மீண்டும் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முடிவடைந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்றது.
இந்த வெற்றியின் மூலம் நியுசிலாந்து அணி மீண்டும் 123 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல் இடத்துக்கு வந்துள்ளது. இந்தியா 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.