வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:27 IST)

தனக்கு பரிசாக வந்த காரை பயிற்சியாளருக்கு அளித்த நடராஜன்!

தனக்கு பரிசாக வந்த காரை பயிற்சியாளருக்கு அளித்த நடராஜன்!
தனக்கு பரிசாக வந்த காரை தன்னுடைய பயிற்சியாளருக்கு தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன் வழங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இடம் பெற்று இருந்தார் என்பதும் அங்கு அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் மிகச் சிறப்பாக பந்துவீசியதற்காக மஹிந்திரா நிறுவனம் நடராஜனுக்கு மகேந்திரா தார் என்ற காரை பரிசாக அளித்தது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன 
 
இந்த நிலையில் தனக்கு மஹிந்திரா நிறுவனம் பரிசளித்த காரை தனது பயிற்சியாளரும் நலம் விரும்பியுவிமான ஜெயபிரகாஷ் என்பவருக்கு பரிசலித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது