செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:20 IST)

ரெய்னாவை என் மகன் போல நடத்தினேன் – இறங்கிவந்த சீனிவாசன்!

ரெய்னாவை என் மகன்களில் ஒருவராக நடத்தினேன் என சி எஸ் கே அணி உரிமையாளர் என் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை தல தோனி என்றால் தளப்தி ரெய்னாதான். தோனியின் ஓய்வுக்குப் பின் அணியை வழிநடத்த போவதே அவர்தான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் , துபாயில் பயிற்சிக்காக சென்றிருந்த ரெய்னா திடீரென இந்தியா கிளம்பி வந்தார்.

இதற்குக் காரணமாக இந்தியாவில் உள்ள அவரது மாமா ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே காரணமில்லை என சொல்லப்படுகிறது. ரெய்னாவுக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தோனிக்கு கொடுத்தது போன்ற  ஒரு அறையை ரெய்னா கேட்டதாகவும், நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்காத‌தால் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ரெய்னாவின் மீதான தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘ரெய்னா இல்லாதது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் என்னிடம் உறுதியான கேப்டன் உள்ளார். தோனி எளிதில் குழப்பமடையமாட்டார். ரெய்னா என்ன இழந்துள்ளார் என்பதை விரைவில் உணர்வார்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது இரு தரப்பும் தங்கள் கோபங்களை இறக்கி வைத்துவிட்டு பேச ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் ’ தோனியுடன் எந்த மோதலும் இல்லை எனவும் அணி உரிமையாளர் சீனிவாசன் கூறியதை தந்தை திட்டியது போல் உணர்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும்  தன்னை கூடிய விரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பார்க்கலாம் எனறும் தான் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்போது சீனிவாசன் ‘ரெய்னாவை நான் எனது மகன் போலதான் நடத்தினேன். சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அணி உரிமையாளர்கள் எஸ்கே அணியின் வெற்றிக்குக் காரணம் என்னவென்றால், அணி உரிமையாளர்கள் யாரும் கிரிக்கெட் விஷயங்களில் தலையிட்டதில்லை.’ எனக் கூறியுள்ளார். அப்போது மீண்டும் ரெய்னா அணிக்குள் வருவாரா என்ற கேள்வி எழுந்தபோது ‘அணிக்குதான் நான் உரிமையாளர். வீரர்களுக்கு இல்லை. அதை கேப்டனும் அணி நிர்வாகியும்தான் முடிவு செய்யவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.