திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (17:04 IST)

இதுதான் சரியான நேரம்… அவரைத் தூக்கி டெஸ்ட் அணியில் போடுங்கள் – முகமது கைப் ஆலோசனை!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்க இதுவே சரியான நேரம் என முகமது கைப் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக 6 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல் தொடரில் விளையாடி அதன் பின் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாண்டுள்ளார். ஒரு நாள் தொடரில் இரு போட்டிகளில் 90 ரன்களுக்கு மேல் குவித்தார். அதே போல நேற்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறவைத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் அவரை டெஸ்ட் அணியில் சேர்க்க இதுதான் சரியான நேரம் என முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.