கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சிகிச்சை பெற்றுவந்த நகைச்சுவை நடிகை திவ்யா பட்னாகர் உயிரிழந்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை திவ்யா பட்னாகர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா உறுதியானது.
அதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 34. இவரது மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.