1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:25 IST)

அரை இறுதிக்கு முன் நாள் வரை ICU-ல் இருந்த ரிஸ்வான்: வைரல் புகைப்படம்!

அரையிறுதி ஆட்டத்துக்கு முந்தைய தினம் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என தகவல். 
 
நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குச் சென்றது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஸ்வான் 52 பந்துகளில் 62 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார். 
 
போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலியாவுடனான நேற்றைய அரையிறுதி ஆட்டத்துக்கு முந்தைய தினம் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சையில் அவர் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார். 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கலந்துகொள்வார் என சந்தேகம் எழுந்த நிலையில் ஒரு போர் வீரன் போல ரிஸ்வான் களத்திற்கு வந்தார் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.