வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 ஜனவரி 2019 (18:02 IST)

ரோகித் சர்மாவுடன் கிஸ்சிங், டேட்டிங்.... பிரபல மாடல் வெளியிட்ட ஷாக் நியூஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ரோகித் சர்மாவை காதலித்தாகவும் ஆனால் அவர் என்னை காயப்படுத்தியதால் பிரிந்திவிட்டதாகவும் நடிகையும் மாடல் நடிகையுமான சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார். 
 
சோபியா ஹயாத் தனது வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதி வருகிறார். இந்த புத்தகம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் லண்டனில் பேட்டி அளித்தார். அப்போது அவர் ரோகித் சர்மாவை பற்றி கூறியது பின்வருமாறு, 
 
கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் சந்தித்தேன். எனக்கு தெரிந்த ஒருவர் ரோகித்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கிளப்பில் நானும், ரோகித்தும் பேசி கொண்டிருந்தோம். 
கிளப்பின் அமைதியான இடத்திற்கு சென்றோம். அங்கு சென்றதும் ரோகித் எனக்கு முத்தம் கொடுத்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடினோம். அவர் நல்லவர், ஸ்வீட்டானவர். 
 
எங்களை ஒன்றாக பார்த்த மீடியா எங்களுக்குள் காதல் என பேசியது. ஆனால், என் காதலை நான் வெளிபடையாக கூற தயாராக இல்லை. ஆனால், ரோகித்தோ நான் அவரது ரசிகை மட்டுமே என கூறிவிட்டார். 
 
இது எனக்கு மிகவும் மனவேதனையை அளித்தது. இதனால் நான் அவரிடம் இருந்து பிரிந்துவிட்டேன் என தெரிவித்தார். அதன் பிறகு ரோகித்தை டிவிட்டரில் பிளாக் செய்தே எனவும் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.