வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:19 IST)

அது மட்டும் நடந்தால் இந்தியா ஒரு ஆண்டுக்கு கொண்டாடலாம் – ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பதில்!

இந்திய அணி கோலி இல்லாமல் ஆஸ்திரேலியாவை வென்றுவிட்டால் அந்த வெற்றியை ஒரு ஆண்டுக்குக் கொண்டாடலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. கோலி டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் தனது மனைவிக்கு பிரசவம் நடக்க உள்ளதால் அவரோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா திரும்பவுள்ளார். கோலி டெஸ்ட் போட்டிகளில் இல்லாதது குறித்து கிட்டத்தட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் எல்லோரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களில் ஒருவரான மைக்கேல் கிளார்க் கோலி இல்லாமல் இந்திய அணி விளையாடுவது குறித்து பேசியுள்ளார். அதில் ‘கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. கேப்டனாகவும் ஒரு வீரராகவும் கோலி இல்லாவிட்டால் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும். ஒரு வேளை விராட்கோலி இல்லாமல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விட்டால் ஓராண்டுக்கு இந்த வெற்றியை கொண்டாடலாம். ‘ எனத் தெரிவித்துள்ளார்.