Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையின் மாற்றம் வெற்றிக்கு வழிவகுக்குமா?

Updated: சனி, 28 ஏப்ரல் 2018 (20:53 IST)
ஐபிஎல்2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணிக்கு எதிராக விளையாடும் மும்பை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

 
முஸ்தஃபிஜூர் மற்றும் பொலார்ட் ஆகியோருக்கு பதிலாக டுமினி மற்றும் பென் கட்டிங் ஆகியோர் மும்பை அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது.
 
இந்த போட்டியில் தோல்வியடைந்தால் இறுதிப்போட்டிக்குயில் செல்ல வேண்டிய குவாலிபையர் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் டுமினி களமிறக்கப்பட்டுள்ளார். டுமினி டி20 போட்டிகளுக்கு சிறந்த கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அனுபவ வீரர் டுமினி ரோகித்துக்கு அணியை வழிநடத்த உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலம் மும்பை அணி சென்னை அணியை வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்லாம் காட்டு

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

அடுத்த கட்டுரையில்
Show comments