1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (13:21 IST)

கால்பந்து போட்டியில் ஆட்ட நாயகன் விருது; மகளுடன் தோனி வைரலாகும் புகைப்படம்

திரை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது சூப்பர் ஹிட்  கோல் அடித்து அசத்தியுள்ளார் கிரிக்கெட் வீரர் தோனி.

 
தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக கால்பந்து போட்டி மும்பையில் நேற்று நடத்தப்பட்டது. அதில் இந்திய கிரிக்கெட்  வீரர்கள் இருக்கும் கால்பந்து அணியும் நேற்று மும்பை மைதானத்தில் மோதிக் கொண்டன. கோலி தலைமையிலான இந்திய  அணியில் தோனியும் ஆடினார்கள். இப்போட்டியில் கோலி தலைமையிலான விளையாட்டு வீரர்கள் அணி 7-2 என்ற கணக்கில்  வெற்றி பெற்றது. தோனி இரண்டு கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
 
இந்நிலையில் கால்பந்து பயிற்சி ஆட்டத்துக்குப் பின் கொடுக்கப்பட்ட இடைவெளியில் அவரது மகள் ஸிவா மைதானத்திற்கு  வந்து அப்பாவுக்கு தண்ணீர் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மகளுக்கு சமமாக அமர்ந்து தோனியும் தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு பேசும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.