புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:36 IST)

கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அபார வெற்றி!

sindhu
கொரிய பேட்மிண்டன் ஓபன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்
 
கொரிய பேட்மிண்டன் போட்டி தற்போது தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனை உடன் மோதினார்
 
இந்த போட்டியில் பிவி சிந்து அபாரமாக விளையாடி21-10, 21-16என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இதனை அடுத்து பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது