செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (13:06 IST)

தந்தையின் வாழ்க்கையை படமாக எடுக்கும் மகள்!

நடிகை தீபிகா படுகோன், விளையாட்டு வீரரான தனது தந்தையின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
 
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தந்தை பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன். இவரது வாழ்கையை படமாக எடுக்கப்போவதாக தீபிகா தெரிவித்துள்ளார். தனது சமீபத்திய பேட்டியில், 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று உலக நாடுகள் அனைத்தும் இந்திய விளையாட்டை பற்றி பேசும்படி செய்தது. 
 
ஆனால், அதற்கு முன்பே உலக நாடுகள் இந்தியாவை நோக்கும் படி செய்தவர் என் தந்தை  பிரகாஷ் படுகோன். அவர் 1981 ஆம் ஆண்டு பேட்மிண்டனில் உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். அவரை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 
 
தற்போது சினிமாவில் விளையாட்டை பின்னணியாக வைத்து வரும் படங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. எனவே, என் தந்தையின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் 83 எனும் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.