வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 25 மே 2017 (13:50 IST)

பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்ல: கோலி கேஸ்சுவல் பதில்!!

சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி பதிலளித்துள்ளார்.


 
 
இங்கிலாந்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.
 
இது குறித்து கோலி பின்வருமாறு பேசினார், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் மிக ஆக்ரோஷமாக பார்க்கின்றனர். இது பல காலமாக நடந்து வருகின்றது. 
 
ஆனால் கிரிக்கெட் வீரர்களாக இதனை சாதரணமாக தான் விளையாடுகின்றோம். ஒவ்வொரு போட்டியும் ஒரு அணி வெல்லத்தான் போராடும். அந்த வகையிலேயே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியையும் நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.