செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (21:05 IST)

சரியும் விக்கெட் அசத்தும் சிஎஸ்கே...

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் சீசன் 11 துவங்கியுள்ளது. இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளன. இந்த சீசனின் 5வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது என்று கட்சிகள் வலியுறுத்தின. 
 
இதனால், மிகப் பெரிய போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஈடுபட்டன. பலத்த பாதுகாப்புக்கு இடையே போட்டி துவங்கியது. 
 
இதில் டாஸை வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, முதலில் பவுலிங் தேர்ந்தெடுத்தார். போட்டியின் துவக்கத்தில் அதிரடி காட்டினாலும், விக்கெட்டுகளை இழந்து வருகிரது கொல்கத்தா அணி. 
 
தற்போது 12 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.