சச்சின் எந்த வயதில் உலக கோப்பை விளையாடினார்? தோனிக்கு ஆதரவாக கபில் தேவ் ஆதங்கம்!!
டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும் இந்திய முன்னாள் வீரர்கல் சிலர் விமர்சித்தனர். இதனையடுத்து தோனிக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்து வருகிறது.
நியூசிலாதுக்கு எதிரான இரண்டாம் டி20 போட்டியில் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என கூறப்பட்டது.
அதோடு இளம் வீரர்களுக்கு வழி விட்டு தோனி ஓய்வு பெற வேண்டும் என கூறப்பட்டது. முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ். லட்சுமண், அகர்கர், ஆகாஷ் சோப்ரா, கங்குலி ஆகியோர் இவ்வாறு விமர்சித்தனர்.
ஆனால், கோலி, ரவிசாஸ்திரி, கவாஸ்கர், காம்பீர் ஆகியோர் தோனிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கபில் தேவ் தோனிக்கு இணையான வீரரை கண்டுபிடித்துவிட்டு அவரது ஓய்வு குறித்து பேசுங்கள் என கூறியிருந்தார்.
மேலும், 2011-ல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தெண்டுல்கர் ஆடிய போது அவரது வயது 38. அந்த வயதில் தெண்டுல்கரை யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இப்போது தோனியின் ஓய்வு குறித்து மட்டுமே பேசப்படுகிறது என தெரிவித்துள்ளார்.