திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (08:35 IST)

அறுவை சிகிச்சை முடிந்து குணமாகிய கே எல் ராகுல்… இங்கிலாந்துக்கு பயணம்!

வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் விரைவாக குணமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கே எல் ராகுல் ஐபிஎல் தொடரின் நடுவில் வயிற்று வலி பிரச்சனைக் காரணமாக பாதியிலேயே விலகினார். அவருக்கு அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து இப்போது அவர் குணமாகியுள்ளதால் உடல்தகுதியை நிரூபித்தால் இங்கிலாந்து செல்லும் அணியோடு இணைவார் என சொல்லப்படுகிறது.