திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (08:04 IST)

ரிலேஷன்ஷிப் பற்றி கேள்வி கேட்ட ரசிகர்… லட்சுமி மேனனின் கூல் பதில்!

நடிகை லட்சுமி மேனன் சமீபத்தில் சமூகவலைதளம் மூலமாக ரசிகர்களுடன் உரையாடினார்.

நடிகை லட்சுமி மேனன் தமிழில் நடித்த எல்லா படங்களுமே ஹிட் ஆனதால், அவருக்கு ராசியான நடிகை என்று பெயர் கிடைத்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் அவர் லைவ்  உரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் லாங் ரிலேஷன் ஷிப்பில் இருந்துள்ளீர்களா?’ எனக் கேட்க லட்சுமி ‘இருந்துள்ளேன்’ எனக் கூறினார். லட்சுமி மேனனுக்கும் தமிழ் முன்னணி நடிகர் ஒருவருக்கும் காதல் இருந்ததாகவும், ஆனால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.