வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (17:06 IST)

நேற்றைய போட்டியில் கே எல் ராகுல் இத்தனை சாதனைகளை முறியடித்துள்ளாரா?

ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சதமடித்த பஞ்சாப் அணிக் கேப்டன் கே எல் ராகுல் சில சாதனைகளை முறியடித்துள்ளார்.

நேற்றையை போட்டியில் கே எல் ராகுல் 69  பந்துகளில் 132 ரன்கள் அடித்து ஆர் சி பி பந்துவீச்சை துவம்சம் செய்தார். இந்த சதத்தின் மூலம் அவர் இரு சாதனைகளை தகர்த்துள்ளார். இந்த சதத்தின் மூலம் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் - 132 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ,ரிஷப் பந்த் (128 ரன்கள்), முரளி விஜய் (127 ரன்கள்), சேவாக் (122 ரன்கள்), பால் வல்தாட்டி (120 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.

அதே போல கேப்டன் ஒருவர் அடித்த அதிக ரன்கள் பட்டியலிலும் அவர் முதல் இடம்பிடித்துள்ளார்.

1) கே.எல்.ராகுல் - 132 ரன்கள்
2) டேவிட் வார்னர் - 126 ரன்கள்
3) சேவாக் - 119 ரன்கள்
4) கோலி - 113 ரன்கள்
5) கோலி 109 ரன்கள்