செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2021 (10:42 IST)

இந்திய வீரர்களின் காயங்களுக்கு இதுதான் காரணம் – முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

இந்திய வீரர்கள் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியதற்கு ஐபிஎல் தொடரும் ஒரு காரணம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரெலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதில் இந்திய வீரர்கள் கே எல் ராகுல், பூம்ரா, விஹாரி மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாட முடியாத சூழலில் உள்ளனர். இதற்கு முன்னரே உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோரும் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்திய வீரர்கள் இப்படி தொடர்ந்து காயமடைவதற்கு ஐபிஎல் தொடரும் ஒரு காரணம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.