செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2021 (09:51 IST)

பச்சை முட்டை ஆஃப் பாயில் வேண்டாம் – இறைச்சியும் நன்றாக வேகவைத்து சாப்பிடவும்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி காரணமாக பச்சை முட்டை மற்றும் ஆஃப் பாயில் போன்றவற்றை சாப்பிட வேண்டாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கால்நடை சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு மர்ம வைரஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களின் கடும் குளிர் காரணமாக இந்த வைரஸ் பரவுவது அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவது குறித்த ஆலோசனைகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கால்நடை சுகாதார ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘இதுவரை பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு கண்டறியப்படவில்லை. ஆனாலும் பரவ வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த அச்சுறுத்தல் நீங்கும் வரை கோழி, வாத்து ஆகியவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேகவைத்து சாப்பிடவேண்டும். 70 டிகிரியில் அவற்றில் உள்ள கிருமிகள் இறந்துவிடும். பச்சை முட்டை மற்றும் ஆஃப் பாயில் ஆகியவற்றை தவிர்க்கலாம்’ எனக் கூறியுள்ளார்.