வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 டிசம்பர் 2025 (12:18 IST)

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்:  தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், ஆஸ்திரேலிய மண்ணில் நீண்ட நாட்களாக தான் அடிக்காமல் இருந்த சதத்தை, ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டில் பூர்த்தி செய்தார். இதன் மூலம், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மேத்திவ் ஹைடன் தான் விதித்த ஒரு விசித்திரமான சவாலில் இருந்து தப்பியுள்ளார்.
 
ஆஷஸ் தொடருக்கு முன்பு ஹைடன், ரூட் சதம் அடிக்கத் தவறினால், தான் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி நிர்வாணமாக நடப்பேன் என்று சவால் விட்டிருந்தார். ரூட் சதம் அடித்ததால், இந்தச் சங்கடமான சூழல் தவிர்க்கப்பட்டது.
 
இந்த சம்பவம் குறித்து வர்ணனையாளரான ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன் உணர்ச்சிப்பூர்வமாக கருத்துத் தெரிவித்தார். ரூட் சதம் அடித்த உடனேயே, அவர், "மிக்க நன்றி ஜோ ரூட். நீங்கள் எங்களது கண்களை காப்பாற்றிவிட்டீர்கள்," என்று மகிழ்ச்சியுடன் கூறினார். 
 
இந்த வேடிக்கையான நிபந்தனையும், மகளின் எதிர்வினையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Mahendran