செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (07:55 IST)

2 ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல் விளையாடிய முன்னணி பந்துவீச்சாளர்.. 2 விக்கெட் எடுத்து அசத்தல்..!

நேற்று நடந்த கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லி அணிக்காக களம் இறங்கிய பந்துவீச்சாளர் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 
 
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பந்துவீச்சாளராக இருந்தவர் இஷாந்த் சர்மா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடாத நிலையில் நேற்று டெல்லி அணிக்காக களமிறங்கினார். அவர் நான்கு ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 127 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லி அணி 19.2 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை டெல்லி அணி நேற்று பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva