1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (16:50 IST)

ஐஸ்வர்யா ராய் மகள் மனு: யூடியூபர்களுக்கு டெல்லி ஐகோர்ட் கண்டிப்பு

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டெல்லி ஐகோர்ட்டில் தன்னை பற்றி அவதூறாக யூடியூபில் பதிவு செய்வதாக மனு தாக்கல் செய்த நிலையில் யூடியூபர்களுக்கு டெல்லி ஹை கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா 12 வயதாகும் நிலையில் அவர் அரிய நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக யூடியூபில் சிலர் அவதூறு பரப்பி வந்தனர் 
 
இது குறித்து ஆராத்யா யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு இன்று டெல்லி ஹை கோர்ட்டில் விசாரணை வந்தது. இந்த விசாரணையில் சாமானியரின் குழந்தையோ அல்லது நட்சத்திரங்களின் குழந்தையோ பாரபட்சமின்றி ஒவ்வொரு குழந்தையின் மாண்பையும் மதிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு குழந்தையின் உடல் நலம் மனநலம் பற்றிய தவறான தகவல்களை பரப்புவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது 
 
மேலும் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran