புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2019 (17:53 IST)

தமிழராக மாறிய ஹர்பஜன் சிங்கின் கலக்கல் வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக அறியப்படுபவர் ஹர்பஜன் சிங். பல சர்சைக்குரிய கருத்துக்களைக் கூறி அவ்வப்போது மாட்டிக்கொள்வார்.  களத்தில் விளையாடும் போது எதிரணி வீரர்களை சீண்டுவதும் இவரது வாடிக்கையாக இருந்தது.ஆனால் தமிழ் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவதற்கான காரணம் அவர் தமிழ் பேசுவதும். தமிழர்களுக்கு  பண்டிகையின் போது அவர் மனமார வாழ்த்து சொல்வதும் தான்.
தற்போது ஐ.பில்.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி  வருகிறார் ஹர்பஜன் சிங் .
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சி.எஸ்.கே பனியனை அணிந்துகொண்டு, வெள்ளை வேட்டி கட்டியபடி, இரண்டு கையில் சிலம்பம் சுற்றுகிறார்.
இதைக் கண்ட நம்ம ஊர் ரசிகர்கள் பலரும் அவருக்கு  பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.