திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2019 (11:43 IST)

விஜய்சேதுபதிக்கு அவர் ஸ்டைலில் தமிழில் நன்றி தெரிவித்த ஹர்பஜன் சிங் !

போட்டிகளின்றி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களே வாய் பிளந்து பாராட்டும் அளவிற்கு தமிழ் சினிமாவை தன் விசித்திர நடிப்பால் உலக தரத்திற்கு உயர்த்தும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சி.எஸ்.கே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார். 
 

 
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்தின. ரசிகர்களின் கரகோஷத்திற்கிடையில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து சென்னை அணி 175 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது சி.எஸ்.கே அணி. 
 
இந்த  போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும், எப்போதும் சென்னை அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணியின் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிடும் கலக்கலான ட்விட்டை தற்போதும் வெளியிட்டுள்ளார்.

அதில் விஜய்சேதுபதி சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் மூச்சு விடாமல் பேசும் புலி கதை வசனம் இடம்பெற்றிருக்கும். அந்த வசனத்தை சி.எஸ்.கே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டு நன்றி சேது ஜி, என்றும் தெரிவித்திருக்கிறார்.