செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2023 (12:47 IST)

நேற்றைய தோல்வியால் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கிறதா பாகிஸ்தான்?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் அணியை தோல்வி அடைந்த நிலையில் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டதாக கூறப்படுகிறது.  

பாகிஸ்தான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து நான்கு புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது

தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து  ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் விளையாட உள்ளது. இதில் வங்கதேசத்தை தவிர மற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவது பாகிஸ்தானுக்கு சவாலான காரியம்.

இன்னும் நான்கு போட்டிகளில் விளையாட உள்ள பாகிஸ்தான் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது..


Edited by Siva