வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (09:02 IST)

இந்தியாவில் தான் 2024ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டி.. இன்று அட்டவணை வெளியீடு..!

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடைபெறும் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடைபெற்ற போது தென்னாப்பிரிக்காவிலும், 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது துபாயிலும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் இந்த ஆண்டும் இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெளிநாட்டில் தான் ஐபிஎல் போட்டி நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆண்டு இந்தியாவில் தான் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் தேர்தல் அறிவிப்புக்கு ஏற்றவாறு ஐபிஎல் அட்டவணை மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 15 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாக இருப்பதாகவும் மக்களவை தேர்தல் தேதி வெளியானவுடன் மீதம் இருக்கும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும் அனைத்து போட்டிகளும் இந்தியாவில்தான் நடைபெறும் என்றும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் அவர்கள் தெரிவித்துள்ளார்

Edited by Siva