2022ஆம் ஆண்டு ஐபிஎல் இந்த நாட்டில் தான் நடக்கின்றதா?
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது
2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளின் ஒரு பகுதி துபாயில் நடந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது தென்னாப்பிரிக்காவில் தான் ஐபிஎல் போட்டிகள் நடந்தது என்பது குறிபிடத்தக்கது
தற்போது தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் விளையாடி வருவது பெரும் வசதியாக இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை அங்கேயே நடத்தி விடலாம் என ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது