மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி த்ரில் வெற்றி
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய மகளிர் அணி 45.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கவுர் 38 ரன்களும் பாண்டே 35 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 147 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 48 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
தென்ஆப்பிரிக்கா மகளிர் அணி 45 ஓவர் முடிவில் வெற்றி பெற 10 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை இருந்தது. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்ததால் அந்த அணி எளிதில் வெற்றி பெறும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் 46 வது மெய்டன் ஓவரில் ஒரு விக்கெட்டையும், 47-வது ஓவரில் ஒரு விக்கெட்டையும் 48 வது ஓவரில் ஒரு விக்கெட்டையும் என 3 விக்கெட்டுகளை வெறும் மூன்று ரன்களுக்கு தென்னாப்பிரிக்க மகளிர் அணி இழந்ததால் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது