1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (15:29 IST)

மண்ணை கவ்விய தென்னாப்பிரிக்க: இந்திய அணி அபார வெற்றி!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.  
 
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனே நகரில் கடந்த பத்தாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த 601 ரன்கள் குவித்தது. விராட் கோலி இரட்டை சதமும் மயாங்க் அகர்வால் சதமும் அடித்தனர்.
 
இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 275 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணி ஃபாலோ ஆன் ஆகி மீண்டும் இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது.
ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி 189 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 
 
அதோடு இந்திய அணி இன்னிங்ஸ், மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.