புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (19:40 IST)

வங்கதேச அணிக்கு எதிரான தொடர்: கோஹ்லி ஓய்வு, நதீம் வெளியே

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி டி20 தொடரில் 1-1 என்ற சமநிலையையும், டெஸ்ட் தொடரில் 0-3 என படுதோல்வியும் அடைந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது
 
இந்த நிலையில் வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. நவம்பர் 3ஆம் தேதி முதல் டி20, நவம்பர் 7ஆம் தேதி 2ஆம் டி20 மற்றும் நவம்பர் 10ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன, அதேபோல் நவம்பர் 14-18 முதல் டெஸ்ட், நவம்பர் 22-26 இரண்டாம் டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வங்கதேச அணி விளையாடவுள்ளது
 
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விபரம் வருமாறு: ரோஹித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், க்ருணால் பாண்ட்யா, சாஹல், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகம்து, ஷிவம் டுபே, ஷர்துல் தாக்கூர். டி20 தொடரில் விராத் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார்
 
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விபரம் வருமாறு: விராத் கோஹ்லி, ரோஹித்சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரே, ரஹானே, விஹாரி, சஹா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கில், ரிஷப் பண்ட்
 
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் புதியதாக களமிறங்கிய பந்துவீச்சாளர் நதீம் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனையடுத்து அவருக்கு வங்கதேச தொடரிலும் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது. ஆனால் இன்று வெளியாகியுள்ள வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் நதீம் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.