இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்று டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் அடுத்த மாதம் விளையாட உள்ளது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் டி20 போட்டி, ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரண்டாம் டி20 போட்டி, ஆகஸ்ட் 6-ம் தேதி மூன்றாம் டி20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி, ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அதன் பின்னர் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் மூன்று விதமான போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல் பின்வருமாறு
டி20 தொடர்: விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், க்ருணால் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஸ்வர் குமார் ,கலீல் அஹமத், தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சயினி
ஒருநாள் தொடர்: விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ,கலீல் அஹமத், மற்றும் நவ்தீப் சயினி
டெஸ்ட் தொடர்: விராத் கோஹ்லி, ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல். ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், விருதிமான் சாஹா, ரோகித் சர்மா , அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்
உலகக்கோப்பை தொடரின்போது காயம் அடைந்திருந்த ஷிகர் தவான் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அதே நேரம் ராணுவ பணிக்கு இரண்டு மாதங்கள் தோனி செல்லவிருப்பதால் இந்த தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த தொடர் முழுவதும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார்