Commonwealth Games; குத்துச்சண்டையில் இந்தியா வெண்கலம்! – 40 பதக்கங்களை வென்று சாதனை!
பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கணை வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கி நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் இந்தியா சார்பாக பல்வேறு போட்டிகளில் பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா இங்கிலாந்து வீராங்கனை ஜெம்மா ரிச்சர்ட்சனுடன் மோதினார். இந்த போட்டியில் ஜேஸ்மின் 2-.3 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.