திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (12:15 IST)

3 அரைசதங்கள், ஒரு சதம்.. 2வது இன்னிங்ஸில் பதிலடி கொடுக்கும் இந்திய அணி..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே பெங்களூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் பதிலடி கொடுத்து வருகிறது. சற்று முன் வரை, இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 16ஆம் தேதி ஆரம்பித்த இந்த போட்டியின் முதல் நாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது. ஆனால், இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து விளையாடுகிறது என்பதும் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் நட்சத்திர ஆட்டகாரரான சர்ப்ராஸ் கான் 125 ரன்கள் எடுத்து இன்னும் களத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் 51 ரன்களும், விராட் கோலி 70 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்களும் அடித்துள்ளனர்.

 நியூசிலாந்து அணியை விட தற்போது வெறும் 12 ரன்கள் மட்டுமே இந்திய அணி பின்தங்கி உள்ளது. இன்னும் 7 விக்கெட்டுகள் கையில் இருப்பதால், நியூசிலாந்து அணிக்கு ஒரு மரியாதையான இலக்கு கொடுக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில், நாளையுடன் இந்த டெஸ்ட் போட்டி முடிவடைய உள்ள நிலையில், என்ன முக்கிய முடிவு ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran