வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 மார்ச் 2023 (08:08 IST)

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி : மும்பையில் இன்று நடக்கிறது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. இன்றைய முதல் போட்டி மும்பையில் மதியம் 1:30 மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தற்போது புத்துணர்ச்சியுடன் ஒரு நாள் போட்டியை விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா கேப்டன் ரோஹித் சர்மாவின் நெருங்கிய உறவினருக்கு திருமணம் என்பதால் அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்பதும் அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ரோகித் சர்மா இல்லை என்பதால் சுப்மன் கில் மற்றும் இசான் கிசான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva