2வது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்திய பேட்ஸ்மேன்கள்.. ஸ்கோர் 86/4
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது என்பது தெரிந்தது. இதனை அடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் சதத்தால் 337 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், வழக்கம் போல் முதல் 4 பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் குறைவான ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். ஜெய்ஸ்வால் 24 ரன்கள், கேஎல் ராகுல் 7 ரன்கள், சுப்மன் கில் 28 ரன்கள் மற்றும் விராட் கோலி 11 ரன்களில் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். சற்று முன் வரை, இந்திய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இந்தியா 70 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரண்டாவது நாளிலேயே இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய நிலையில், நான்கே நாட்களில் இந்த டெஸ்ட் போட்டி முடிவடையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில், பும்ரா மற்றும் சிராஜ் தலா நான்கு விக்கெட்டுகளையும், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran