வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (08:41 IST)

பாரா ஒலிம்பிக்கில் முதல் தங்கம்: இந்திய வீராங்கனை அசத்தல்!

பாரா ஒலிம்பிக்கில் முதல் தங்கம்: இந்திய வீராங்கனை அசத்தல்!
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் பெற்றுள்ளதை அடுத்து இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது
 
சற்று முன் நடைபெற்ற 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா தங்கம் வென்று சாதனை செய்துள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைப்பது இதுவே முதல் முறை என்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஒன்றில் முதுகு தண்டுவட பாதிப்பு ஏற்பட்டு இந்த நிலையில் மீண்டும் குணமாகி கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சுடும் போட்டியில் பங்கேற்று வருகிறார் அவானி லெகாரா.
 
இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் அவர் மீண்டும் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியாவுக்கு 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளதை அடுத்து நான்கு பக்கங்களில் இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது