ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (14:13 IST)

400 ரன்களை தாண்டிய இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்.. இங்கிலாந்து பேட்டிங்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களுக்கு ஆட்டம் இழந்துள்ளது 
 
நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஆரம்பத்தில் தடுமாறிய இந்திய அணி அதன் பின் சுதாரித்து விளையாடியது. 
 
ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்த நிலையில் இந்தியா 130.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 445 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva