திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (06:46 IST)

318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! பும்ரா அசத்தல் பவுலிங்!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பும்ரா மிகச் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார் 
 
மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி கடந்த 22ஆம் தேதி முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது
 
 
இதனையடுத்து முதல் இன்னிங்சில் 222 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த மேற்கிந்திய தீவுகள் அணீ வெற்றி பெற 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோரின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 100 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது 
 
இந்த போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்த ரஹானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்