8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. தொடரையும் வென்றது!
8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. தொடரையும் வென்றது!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீசிய நிலையில் நியூஸிலாந்து அணி இந்திய பந்து பேச்சாளர்களின் அதிரடி தாக்குதலை தாங்க முடியாமல் 108 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது.
இதனை அடுத்து 109 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதனை அடுத்து இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
ஏற்கனவே முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இந்த தொடரையும் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran