வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (11:05 IST)

லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டுக்கு புதிய ரூல்ஸ் – அறிமுகமாகிறது ’ஸ்டாப் கிளாக்’ !

லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச அணிகள் நேரம் எடுத்துக் கொள்வதைத் தவிரிக்கும் பொருட்டு ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி அறிமுகம் செய்ய உள்ளது.

டி20, ஒருநாள் கிரிக்கெட் போன்ற லிமிடெட் ஓவர் போட்டிகளில் அணிகள் தங்கள் ஓவர்களை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் போட்டியை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதுபோன்ற சமயங்களில் அணித் தலைவர் அல்லது மொத்த அணிக்கே அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை ஐசிசி எடுத்து வந்தது.

இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக ஸ்டாப் கிளாக் முறையை அறிமுகம் செய்ய உள்ளது ஐசிசி. உதாரணமாக டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸ் பந்துவீச 85 நிமிடங்கள் ஆகும் என்றால் வீரர்களுக்குத் தெரியும் படி மைதானத்தில் நேரம் ஓடிக்கொண்டிருக்கும். இதன் படி கடிகாரம் ஜீரோ என்று காட்டும் போது பவுலிங் அணி தன் கடைசி ஓவரை வீச தொடங்கியிருக்க வேண்டும். 

ஆனால் இடையில் டி.ஆர்.எஸ். அப்பீல் மற்றும் வீரர்கள் காயமடைதல் போன்றவற்றின் போது அந்த கடிகாரத்தை நடுவர் நிறுத்திவிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.