செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (11:27 IST)

ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த 8 தொடர்கள்… 3 தொடர்கள் இந்தியாவில்!

ஐசிசி அடுத்து நடத்தவுள்ள 8 தொடர்களின் அட்டவணை மற்றும் நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐசிசி நடத்திய 2021 ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலௌயில் அடுத்து 2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை நடக்க உள்ள ஐசிசி தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டு அந்த தொடர் நடக்க உள்ள நாடுகளின் பெயர்களையும் அறிவித்துள்ளது. இதில் 3 தொடர்களை இந்தியா மற்ற நாடுகளோடு இணைந்து நடத்துகிறது.

தொடர் விவரம்
  • 2024 டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்
  • 2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான்
  • 2026 டி20 உலகக் கோப்பை: இந்தியா, இலங்கை
  • 2027 ஒரு நாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா
  • 2028 டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
  • 2029 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா
  • 2030 டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து
  • 2031 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா, பங்களாதேஷ