வந்தா கேப்டனா தான் வருவேன்: நிபந்தனை விதித்தாரா ஹர்திக் பாண்ட்யா?
வந்தால் கேப்டனாக தான் வருவேன் என்று ஹர்திக் பாண்டியா நிபந்தனை விதித்ததாகவும் அதனால்தான் ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பை அவருக்கு மும்பை அணி நிர்வாகம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன
மும்பை அணியின் கேப்டனாக கடந்த பல ஆண்டுகளாக ரோகித் சர்மா இருந்து வந்த நிலையில் பல வெற்றிகளையும் பெற்று தந்துள்ளார்
இந்த நிலையில் திடீரென மும்பை அணியின் கேப்டனாக நேற்று ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா அழைக்கப்பட்டபோது கேப்டனாக தான் வருவேன் என்று அணி நிர்வாகத்திடம் ஹர்திக் பாண்டியா நிபந்தனை விதித்ததாகவும் அவருடைய நிபந்தனையை ஏற்று தான் அவரை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த தகவல் ரோஹித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva