மாரியப்பன், புஜாரா உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது!!
விளையாட்டு துறை சார்ந்த விருதான அர்ஜுனா விருதுக்கு இந்த ஆண்டு 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு பாராலிம்பிக்கில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌர், கிரிக்கெட் வீரர் புஜாரா, பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற வருண் பாரதி, கோல்ப் வீரர் எஸ்எஸ்பி சௌராசியா உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்படுகின்றன.