ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் மேலும் 4 அணிகள்
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் இதுவரை 12 அணிகள் மட்டுமே இருந்து வரும் நிலையில் தற்போது இதில் மேலும் நான்கு புதிய அணிகளை ஐசிசி இணைத்துள்ளது.
இதன்படி இந்த தரவரிசையில் ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இப்போதைக்கு தரவரிசை பட்டியலில் ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் இன்னும் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடிய பின்னர் தரவரிசையில் இணைக்கப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஐசிசி தரவரிசை பட்டியலில் தற்போதுள்ள 14 நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு:
1. இங்கிலாந்து (125 புள்ளகள்), 2. இந்தியா (122), 3.தென்ஆப்பிரிக்கா (113), 4.நியூசிலாந்து (112), 5. ஆஸ்திரேலியா (104), 6.பாகிஸ்தான் (102), 7. வங்காளதேசம் (93), 8.இலங்கை (77), 9.வெஸ்ட்இண்டீஸ் (69), 10. ஆப்கானிஸ்தான் (63), 11.ஜிம்பாப்வே (55), 12.அயர்லாந்து (38), 13.ஸ்காட்லாந்து (28), 14.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (18).