திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (08:37 IST)

கால்பந்தாட்ட தடையை நீக்கிய ஃபிஃபா! – இந்தியாவில் நடைபெறுகிறது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து!

Football world cup
இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஃபிஃபா விதித்த தடை நீக்கப்பட்டதால் இந்தியாவில் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மௌனமான பிபா கால்பந்து போட்டிகளை ஒன்றிணைக்கிறது.
சமீபத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த உச்சநீதிமன்றம், கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. புதிய நிர்வாகிகள் நியமனம் வரை இந்த 3 பேர் குழுவே கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மூன்றாம் நபர்கள் தலையீடு இருப்பதை ஏற்காத சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதித்ததுடன், அக்டோபரில் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்தையும் நடத்தப்போவதில்லை என தெரிவித்திருந்தது.

இதுகுறித்த விவகாரம் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் மூன்று பேர் குழுவை கலைத்த உச்சநீதிமன்றம், மீண்டும் அதிகாரத்தை இந்திய கால்பந்து கூட்டமைப்பிடமே ஒப்படைத்தது. இதனால் இந்தியாவிற்கு விதித்த தடையை நீக்கிய ஃபிஃபா முன்னதாக அறிவித்தப்படி இந்தியாவிலேயே பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.