திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (08:18 IST)

இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்ட்!? – பிபா எடுத்த அதிரடி முடிவு!

football
இந்திய கால்பந்து கூட்டமைப்பை சில காலம் சஸ்பெண்ட் செய்வதாக பிபா முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மௌனமான பிபா கால்பந்து போட்டிகளை ஒன்றிணைக்கிறது. இந்நிலையில் பிபாவின் விதிகளை மீறி மூன்றாம் நபர்களின் தலையீடு இந்திய கால்பந்து கூட்டமைப்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்காக இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது நடவடிக்கை எடுத்துள்ள பிபா வருகிற அக்டோபர் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்தியாவில் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்ட 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்தப்படாது என்றும் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.