செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 13 மே 2018 (15:27 IST)

பாகிஸ்தான் முன்னாள் ஹாக்கி வீரர் மரணம்

பாகிஸ்தான் முன்னாள் ஹாக்கி வீரர், மன்சூர் அகமது உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.
1986 ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் ஹாக்கி அணியில் பிரபலமாக பேசப்பட்டவர் மன்சூர் அகமது. இவர் கோல் கீப்பராக இருந்தார்.
 
இந்நிலையில் 49 வயதான மன்சூர் அகமது  இதய நோயால் பாதிக்கப்பட்டு கராச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
பாகிஸ்தான் அரசு  இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய முன்வந்த போதும் மன்சூர் அகமது, அறுவை சிகிச்சையை இந்தியாவில் செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்
இதனையடுத்து மன்சூர் அகமது சமீபத்தில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியாவிடம் உதவி கேட்டிருந்தார். அவருக்கு உதவ சென்னை ஹாக்கி சங்கமும், போர்டிஸ் மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்திருந்தது.
 
ஆனால் அதற்குள் சிகிச்சை பெற்று வந்த மன்சூர் அகமது, உடல் நிலை மோசமாகி கராச்சி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.