வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 10 மே 2018 (20:58 IST)

பழம்பெரும் குணச்சித்திர நடிகர் நீலகண்டன் மரணம்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் குணச்சித்திர நடிகர் நீலகண்டன் உடல் நலக்குறைவால் காலமானார்.

 
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர நடிகர் நீலகண்டன்(83) 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 
 
இவர் வெகு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். நாளை சென்னை பெசன்ட் நகரிலுள்ள இவரது வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.