செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 செப்டம்பர் 2018 (07:01 IST)

60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி: தொடரையும் இழந்தது

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்தது

நேற்றைய 5ஆம் ஆட்டத்தில் இந்தியா 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. ஆனால் 22 ரன்கள் எடுப்பதற்குள் தவான், ராகுல், புஜாரா ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுக்களை இந்தியா இழந்தது. முதல் இன்னிங்சில் அபார சதமடித்த புஜாரே 2வது இன்னிங்சில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இருப்பினும் விராத் கோஹ்லி ரஹானே ஜோடி நன்றால விளையாடியது. விராத் 58 ரன்களும், ரஹானே 51 ரன்களும் எடுத்த நிலையில் இருவரும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் விளையாடிய அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்திய அணி 184 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் 2வது இன்னிங்ஸில் 4  என மொத்தம் 9 விக்கெட்டுக்களை வீழ்த்தி அபாரமாக பந்துவீசிய எம்.எம்.அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.